
அமெரிக்காவின் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றங்கள் தணிந்த பிறகு அமெரிக்க போர்க்கப்பல்கள் கியூபா கடற்கரை வழியாக அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.
கியூபா கடற்கரையிலிருந்து சுமார் 50 கடல்மைல் தொலைவில் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டு அங்குள்ள அரசை அகற்ற முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்.
இதற்காக வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கியூபாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும், கியூபாவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.