
முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரிய வழக்கு, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூன் 15-ம் தேதி நடந்த விசாரணையில், நீதிபதி சுஜாதா இருதரப்பு விவரங்களையும் மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்ப பரிந்துரைத்தார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆஜராவது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது.