
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2026-2027 கல்வியாண்டு முதல் கேஜி முதல் 2-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வித் திறன் மதிப்பீடு இனி 50 சதவீத மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் மற்றும் 50 சதவீத பள்ளி அடிப்படையிலான தேர்வுகள் எனப் பிரிக்கப்படும்.
ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்க உள்ள புதிய கல்வியாண்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு நவீனமயமாக்கப்பட உள்ளது.