
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான் உட்பட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், சுழற்சி முறையில் பாகிஸ்தான் மாநாட்டை நடத்துகிறது.
உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது மாநாட்டை நடத்தும் நாட்டின் கடமை என்பதால், இந்தியாவிற்கும் அழைப்பு விடுக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.