
ஆப்கானிஸ்தான் எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளை ட்ரோன் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் ராணுவம் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
பண நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளுக்குப் பதிலாக, சுமார் 1,400 டாலர் செலவில் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி வருகிறது.
பாதுகாப்பு வல்லுநர்கள், மீன்பிடி வலைகள் ஒரு முழுமையான தீர்வு அல்ல என்றும், அவை தவறான பாதுகாப்பு உணர்வைத் தரக்கூடியவை என்றும் எச்சரித்துள்ளனர்.