
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக, சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்று இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக மெக்கா, மெதினா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் ஆபத்து காலங்களில் 911 என்ற அவசர எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆபத்து நீங்கும் வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், திறந்தவெளி மற்றும் ஜன்னல் அருகில் இருக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.