
சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் உள்ள ஷாச்சென் குதிரைப் பந்தய மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
சுமார் 3,500 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் நடந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர், அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து காவல்துறை இன்னும் தகவல் வெளியிடவில்லை, பொதுமக்கள் அப்பகுதியைத் தவிர்க்குமாறு ஆராவ் மாநிலக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.