
வங்கதேசத்தில் தீவிரமாகப் பரவி வரும் தட்டம்மை நோயால் மார்ச் மாதம் முதல் இதுவரை கிட்டத்தட்ட 986 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்போது வரை 1,80,000 பேர் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 6 மாதங்கள் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதால் ஏற்பட்ட அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் வேலைநிறுத்தங்களால் 2024-ல் திட்டமிடப்பட்ட தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தாமதமானது.