
செயற்கை நுண்ணறிவு (AI) நுட்பத்தால் மனித குலத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்க கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூஸம் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் ஏஐ நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புச் சோதனைகள் மீது சுதந்திரமான மேற்பார்வை நிறுவப்பட்டு புதிய சட்டம் இயற்றப்படவுள்ளது.
மனிதக் கட்டுப்பாட்டை மீறும் ஏஐ அமைப்புகளை உடனடியாக நிறுத்த 'கில் ஸ்விட்ச்' உருவாக்கும் பணியையும் முன்னெடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.