
சென்னையில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட சுனில் என்பவரின் அண்ணன் முனீஸ்வரனை, ஆத்திரமடைந்த கும்பல் கட்டையால் தாக்கி கொலை செய்தது.
இந்த வழக்கில் லோகேஷ்வரன், ஜான்சன், ஜெயந்தன் மற்றும் ஒரு சிறுவன் என மொத்தம் 4 பேரை சாத்தாங்காடு போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 30-ம் தேதி நடைபெற்ற தகராறில் படுகாயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனீஸ்வரன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.