
வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன் அதிகளவில் ரசாயன நுரை பொங்கி வழியும் பிரச்னைக்கு பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு கூட காரணம் என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்துள்ளார்.
மழைக்காலங்களில் மட்டும் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது நுரை ஏற்படுவதாகவும், அதே வேளையில் சாயப் பட்டறைகள் மற்றும் டெக்ஸ்டைல் ஆலைகள் ரசாயனக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஆலை மூடல் போன்ற நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் கூறியுள்ளார்.