
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை மற்றும் காணிக்கை பணத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று உண்டியல் ஏந்திப் போராட்டம் நடத்தினர்.
இந்த முறைகேடு தொடர்பாக சிறப்புப் படை இதுவரை 8-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ள நிலையில், பல கோடி ரூபாய் நிதி மற்றும் தங்கம், வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.