
ரோம் நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், தெற்கு லெபனானின் ஹத்ததா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களைக் கைவிட்டால் படைகளை வாபஸ் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்திருந்த நிலையில், பியூபோர்ட் மலைப்பகுதியில் உள்ள சுரங்கங்களை இஸ்ரேல் படைகள் தகர்த்துள்ளன.
வடக்கு இஸ்ரேல் மீதான தாக்குதலை ஹிஸ்புல்லா நிறுத்தவில்லை என்றால் பெய்ரூட்டை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.