
விரைவு ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் ஆர்.ஏ.சி. பயணிகளுக்கும் போர்வை, கம்பளி மற்றும் தலையணை வழங்குவதை கட்டாயமாக்கி ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த உத்தரவு இருந்தபோதிலும் முறையாகப் பின்பற்றப்படாததால், அனைத்து மண்டல பொதுமேலாளர்களும் இதை உறுதி செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
போர்வை மற்றும் தலையணை பற்றாக்குறையால் ஒப்பந்த ஊழியர்கள் அவற்றை வழங்க மறுப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில், இந்த புதிய உத்தரவு பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.