தாய்லாந்தில் கால்பந்து மைதானத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த வீரர் ஒருவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மேலும் 12 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாய்லாந்து கால்பந்து சங்கம் இந்த துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், மைதான பாதுகாப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.