
சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 4 குறிப்பிட்ட இடங்களில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.
இந்த சிலை கரைப்பு நிகழ்விற்காகக் காவல்துறை சார்பில் 16,500 காவலர்கள் மற்றும் 2 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்கக் கூடாது எனவும், விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.