
ஜப்பானின் நகோயாவில் நடைபெறவுள்ள 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்காக 'கோஸ்டா செரீனா' சொகுசு கப்பல் விளையாட்டு கிராமமாக மாற்றப்படுகிறது.
கட்டுமானச் செலவைக் குறைக்க எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, 14 தளங்களைக் கொண்ட இந்தக் கப்பலில் 4,000 முதல் 5,000 வீரர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர்.
வில்வித்தை, கபடி, டென்னிஸ் உள்ளிட்ட 20 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கும் வீரர்கள் நகோயா துறைமுகத்தில் நிறுத்தப்படும் இந்தக் கப்பலில் தங்குவார்கள்.