
இந்தியாவின் பேட்டரி ரசாயனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் துறை 2025-30 காலகட்டத்தில் ஆண்டுக்கு 39 சதவீத சராசரி வளர்ச்சியைக் காணும் என நுவாமா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
ரசாயன செல்களுக்கான தேவை 2025-ல் 40 ஜிகாவாட் மணியாக இருந்த நிலையில், 2030-க்குள் அது 700 ஜிகாவாட் மணியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி செல் உற்பத்தி திறனை அதிகரிக்க 18,100 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எல்.ஐ. ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுவதோடு, 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 178 ஜிகாவாட் மணி உற்பத்தி திறனை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.