ஹரியானாவில் நடைபெற்ற 2-வது தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் தமிழக அணி ஒற்றையர் பிரிவுகளில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் ஆறு பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஆடவர் மற்றும் மகளிர் பல்வேறு வயதுப் பிரிவுகளில் அபினந்த், சஞ்சய், தனிஷக், அனன்யா மற்றும் ஹன்சின் ஆகியோர் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.