
ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேரின் வேலையைச் செய்து முடிக்க முடியும் என ஸோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
முன்பு மென்பொருள் பொறியாளர்களை வேலைக்கு அமர்த்த முடியாத தொழில்துறைகள் இப்போது அவர்களைப் பணியமர்த்திக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் மறுசீரமைப்பு நிகழப்போவதாகவும், இத்தகைய மாற்றத்தைச் சந்திக்கும் காலம் சற்று கடினமானதாக இருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.