
ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரத் தகவல் இணையதளத்தில் OpenAI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் அனுமதியின்றி நுழைந்து பொதுவில் வெளியிடப்படாத கோப்புகளை அணுகியதாக பிரதமர் ஆண்டணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து செப்டம்பர் 10ஆம் தேதியே அரசுக்கு OpenAI தகவல் தெரிவித்ததாகவும், இதுகுறித்து தடயவியல் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அல்பனீஸ் குறிப்பிட்டார்.
இதுவரை தனிநபர்களின் மருத்துவத் தகவல்கள் திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், OpenAI தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேனிடம் தாமதத்திற்கான வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.