
சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் ஆதார் சரிபார்ப்பு எனப்படும் இ-கேஒய்சி பணியை வரும் ஆகஸ்ட் 16-க்குள் முடிக்க மத்திய அரசு இறுதி அவகாசம் அளித்துள்ளது.
மொத்தம் உள்ள 2.40 கோடி வாடிக்கையாளர்களில் இன்னும் 15 சதவீதம் பேர் இந்த சரிபார்ப்பு பணியை முடிக்காமல் உள்ளனர்.
குறிப்பிட்ட தேதிக்குள் விரல் ரேகை அல்லது முகம் பதிவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.