இலங்கையின் புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்திர தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
விழாவை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.