
இந்தியன் வங்கி ஆயுள் காப்பீடு மற்றும் சொத்து மேலாண்மை எனப்படும் பரஸ்பர நிதி தொழிலில் நுழையும் திட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தத் துறைகளில் நுழைவதற்காக துணை நிறுவனங்கள் அல்லது கூட்டு நிறுவனங்களை உருவாக்குவது குறித்து வங்கியின் இயக்குநர் குழுவின் ஒப்புதலை பெறும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தியன் வங்கி ஏற்கனவே பொது காப்பீட்டுத் துறையான யுனிவர்சல் சோம்போ காப்பீட்டு நிறுவனத்தில் 28.52 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.