
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
தனது 77-வது டெஸ்ட் இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டிய கில், 26 வயது 349 நாட்களில் இந்த சாதனையைச் செய்து இளம் இந்திய வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு 11 டெஸ்ட் போட்டிகளில் 74.06 சராசரியுடன் விளையாடி வரும் கில், இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 சதங்களை அடித்துள்ளார்.