/polimer-news/media/media_files/2026/10/06/ashwinkohlirohit-2026-10-06-10-55-09.jpg)
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு குறித்து முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் முக்கியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, முகமது சிராஜ் போன்ற பந்துவீச்சாளர்களை அணியில் இருந்து நீக்கினால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்று அவர் கூறினார்.
ஆனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்குவது எளிதான முடிவு அல்லவென்றும், அப்படிச் செய்தால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்வினை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.