
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது மகள் வீணா விஜயன் ஆகியோருக்கு எதிரான வழக்கில், மாநில அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சிஎம்ஆர்எல் என்ற தனியார் நிறுவனம், ஆலோசனை சேவை என்ற பெயரில் எந்தவொரு சேவையும் பெறாமல் முறைகேடாக ரூ.2.78 கோடி பணப்பட்டுவாடா செய்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கு ஒருவாரம் தடை விதிக்கப்படுவதாகவும், இந்த இடைப்பட்ட காலத்தில் வழக்கில் நிவாரணம் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகவும் பினராயி விஜயன் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.