
உலகின் வறண்ட பகுதியான சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட பனிப்புயலால் அப்பகுதி பனிப்பிரதேசம் போல காட்சியளிக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 6, 14 மற்றும் 19 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் பாலைவனத்தின் வறண்ட நிலை பனிப்படலமாக மாறியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆண்டெஸ் மலைப்பகுதியில் இருந்து பசிபிக் கரை வரை பனி பரவியுள்ள நிலையில், பாலைவனத்தில் காட்டு மலர்களும் பூத்துக்குலுங்கி அழகுற காட்சி அளிக்கின்றன.