
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் வெளியிட்டுள்ள செப்டம்பர் காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை விடக் குறைவாக இருந்தன.
இதன் எதிரொலியாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் கூகுள் பங்குகள் 13.4 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தன.
இந்தச் சரிவினால் கூகுள் நிறுவனம் ஒரே நாளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.