
ஏமனின் மரிப் மற்றும் ஹத்ரமவுத் மாகாணங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழுவிற்கும் ஏமன் அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 6 அன்று இந்த மிக மோசமான ராணுவ மோதல் அரங்கேறியுள்ளது.