
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலியைப் பிடிக்க வனத்துறையினர் அமைத்திருந்த 13 கூண்டுகளில் ஒன்றில் இன்று அதிகாலை சிறுத்தை சிக்கியது.
கடந்த 20 நாட்களாக அப்பகுதியில் புலியைத் தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், சிறுத்தை மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
மனிதர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் புலியைப் பிடிக்கும் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.