
தைவானில் நடைபெறும் தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-10, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, சக நாட்டு வீராங்கனை தஸ்னிம் மிர்ரை 21-16, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற இருவரும் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அடுத்தகட்டப் போட்டிகளுக்குத் தயாராகி வருகின்றனர்.