
தொழில் நிர்வாக ஆலோசனை நிறுவனமான ‘பாஸ்டன் கன்சல்டிங் குரூப்’ தரவுகளின்படி, புதிய அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா சீனாவை விஞ்சியுள்ளது.
புதிய திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக இந்தியா பெற்ற புதிய முதலீடு 2016-20 காலத்தில் ரூ.21.09 லட்சம் கோடியாக இருந்தது.
இந்த முதலீடு 2021-25 காலத்தில் கிட்டத்தட்ட ரூ.33.34 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுடன், சீனாவுடனான ஒப்பீட்டில் இந்தியா இரண்டு மடங்குக்கும் அதிகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.