
இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய 'நகர்ப்புற நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு' முடிவுகளின்படி, 54.5 சதவீத நகர்ப்புற குடும்பங்களின் பொருளாதார நிலை கடந்த ஓராண்டில் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் உள்ள 19 முக்கிய நகரங்களைச் சேர்ந்த 6,054 பேரிடம் கடந்த மாதம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
உணவு மற்றும் எரிபொருள் விலைவாசி உயர்வு காரணமாக அத்தியாவசிய செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆடம்பரப் பொருட்களுக்கான செலவினங்களை மக்கள் குறைத்துள்ளனர்.