
டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நிறுவனத்தில் 66 சதவீத பங்குகளை வைத்துள்ள டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி டாடா டிரஸ்ட்ஸ் சார்பில் ஆஜராக உள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி டாடா டிரஸ்டுக்கே முதன்மை அதிகாரம் உண்டு என்றும், இந்த அமைப்பின் முடிவெடுக்கும் உரிமையைத் தடுக்க முடியாது என்றும் வழக்கறிஞர் சிங்வி தெரிவித்தார்.