வங்கி ஊழியர் ஒருவரின் மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு சில தரவுகள் கசியவிடப்பட்டதை பேங்க் ஆஃப் பரோடா வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
வங்கியின் முக்கிய அமைப்புகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான தடயவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹேக்கர் ஒருவர் வங்கியின் 1 டெராபைட் அளவிலான தரவுகளைத் திருடியதாகக் கூறிய சில மணி நேரங்களிலேயே வங்கி இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.