
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தானியங்கி கார் பிரிவான வேமோ, கனடாவின் ரொறன்ரோவில் ரோபோடாக்சி சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக மனிதர்களைக் கொண்டு உயர்-தெளிவுத்திறன் வரைபடங்களை உருவாக்கும் பணியைத் தொடங்கும் நிறுவனம், பின்னர் மனிதப் பாதுகாப்புப் பணியாளருடன் சோதனை செய்து 2028 இல் பொதுமக்களுக்கு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
ரொறன்ரோவைச் சேர்ந்த எலிமென்ட் ஃப்ளீட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ள வேமோ, இதன் மூலம் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.