
தமிழகத்தில் தவெக அரசு தனது 100 நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் தனது சாதனைகளை விளக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பதவியேற்ற முதல் நாளில் 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் மற்றும் 5 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.
100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.