
துருக்கியின் மணீசா மாகாணத்தில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 மாணவர்கள் காயமடைந்தனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
துப்பாக்கி சூடு நடத்திய மாணவர், அவரது பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.