
ஜப்பானில் உள்ள 'பஞ்ச்' என்ற குரங்கு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடியது, இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்தக் குரங்கிற்கு இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுகள் வந்து சேர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தனிமையில் இருந்த இந்தக் குரங்கு, தற்போது உலகப் புகழ்பெற்ற நட்சத்திரமாக மாறியுள்ளதாக சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு வருகிறது.