உக்ரைனின் டினிப்ரோ நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் நடைமேடையில் நின்றுகொண்டிருந்த பயணிகள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
செர்னிஹிவ் மற்றும் கிரெமென்சுக் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட மற்ற இரண்டு தாக்குதல்களில் மேலும் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து, ஒரே நாளில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்கவும் புதிய நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.