
முதல்வர் விஜய்யுடன் பொதுவெளியில் தோன்றுவது குறித்து நடிகை த்ரிஷா மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தெலுங்கு நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பங்களை விமர்சிப்பதை விட, அரசியல்வாதியான விஜய்யின் நிர்வாகத் திறனைப் பற்றி பேசுமாறு சஞ்சனா கல்ராணி வலியுறுத்தியுள்ளார்.
த்ரிஷா ஒரு வெற்றிகரமான நடிகை என்றும், அவரை இழிவாகப் பேசுவது வருத்தமளிப்பதாகவும், இது போன்ற விமர்சனங்கள் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.