
காவிரி நீர் திறப்பு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்த கருத்துகளை விமர்சித்த புகழேந்தி, காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டத்தை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும் என்று கூறினார்.
நீட் தேர்வு மற்றும் காவிரி நீர் விவகாரங்களில் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் அமைச்சரவைக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.