
ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் விடியோ எடிட் செய்யும் வகையில் அடோப் பிரீமியர் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன்மூலம் கணினி இல்லாமல் செல்போனிலேயே விடியோக்களை வெட்டலாம், ஒன்றிணைக்கலாம் மற்றும் 4கே தரத்தில் கூட விடியோக்களை உருவாக்கலாம்.
ஆரம்பத்தில் 62.3 MB ஆக இருந்த இதன் தரவிறக்க கொள்ளளவு தற்போது 153 MB முதல் 168 MB வரை உள்ளதால், குறைந்தது 5GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போனில் மட்டுமே பயன்படுத்த முடியும்.