
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-18, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இரண்டாவது சுற்றில் கனடாவின் விக்ரர் லாயை வீழ்த்திய 33 வயதான ஸ்ரீகாந்த், கால் இறுதி சுற்றில் ஹாங் காங்கின் லீ சியுக் லியை எதிர்கொள்கிறார்.
அதே தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தன்வி சர்மா தோல்வியடைந்த நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.