
அழிவின் விளிம்பில் உள்ள 'லார் கிப்பன்' வகை குரங்குடன் நடிகர் விக்ரம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, அவரது சம்பந்தி சி.கே. ரங்கநாதன் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தடை செய்யப்பட்ட இந்த வகை குரங்குகளை வீடுகளில் வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்பதால், குரங்கு யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பதற்கான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மணிப்பூரைச் சேர்ந்த லைகுராம் என்பவர் மலேசியாவிலிருந்து கடத்தி வந்த எட்டு குரங்கு குட்டிகளில் ஒன்றுதான் விக்ரம் சம்பந்தி வீட்டில் இருப்பதாக வனத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.