
மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் தூத்துக்குடியில் ரூ.18,400 கோடி மதிப்பிலான கடல்சார் உட்கட்டமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அமைச்சக செயலர் விஜயகுமார் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி திட்ட ஆலை மற்றும் காற்றாலை மின் வசதிகளை நேரில் ஆய்வு செய்தார்.
இந்தத் திட்டங்களின் கீழ் ரூ.17,167 கோடியில் வெளித்துறைமுக மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட மூன்று முக்கிய திட்டங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.