
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இடைக்கால மாத ஊதியத்தில் அகவிலைப்படியை 60 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
6-வது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாக ஊதியம் பெற்றவர்களுக்கு, ஜனவரி 1, 2026 முதல் அகவிலைப்படி 262 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பின், இடைக்கால அடிப்படையில் ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என கருவூலத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.