
இயக்குநர் பாரதிராஜா இறுதியாக நடித்த 'புலவர்' திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகைய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாரதிராஜாவுடன் ரேச்சல் ரெபக்கா, ஹலோ கந்தசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர், அஜ்மல் கான் இசையமைத்துள்ளார்.
காவல் நிலைய விசாரணையை மையமாகக் கொண்ட 1.08 நிமிட டீசர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.