/nakkheeran/media/media_files/2026/10/31/ned-2026-10-31-17-59-24.jpg)
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ரப்தாடு ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடந்து கொண்டிருந்தபோது வகுப்பறைக்குள் புகுந்த 21 வயது வாலிபர் ஹேமந்த், பத்தாம் வகுப்பு மாணவி மீது மின்சார இயந்திர சங்கிலி ரம்பம் மூலம் கொடூரத் தாக்குதல் நடத்தினார்.
கவலைக்கிடமான நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தனிக் கவனம் செலுத்தி உயர்தர சிகிச்சை வழங்குமாறு மருத்துவக் குழுவிற்கு முதல்வர் சந்திரபாபு உத்தரவிட்டுள்ளதுடன், குடும்பத்திற்கு அரசு துணையாக இருக்கும் என ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவத்தைத் தடுக்க முயன்ற மற்றொரு மாணவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.